தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கிபேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு தொகுதிக்கு 75 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மேலும் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து உள்ளது. இதனைக் கண்டித்து அ.தி.மு.க. பொதுச் செயலரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ஆளுனர் மாளிகை நோக்கி நடைபெறும் பேரணியில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாா்பில் திரளாக பங்கேற்க வேண்டும். அதுபோல் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாபெரும் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.