அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருவாடானையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கை அடைய பூத் கமிட்டி வாரியாக புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் ராமநாதபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவாடானை ஒன்றியத்தில் இருந்து அதிக அளவில் நிர்வாகிகள் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்வது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ஆணிமுத்து, ஒன்றிய செயலாளர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story