வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

வேலூர்

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் வேலூர் மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், மாவட்ட இனண செயலாளர் சுகன்யா தாஸ், துணைச் செயலாளர் ஜெயபிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் குட்டி லட்சுமி சிவாஜி, காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், அணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், ஆர்.சுந்தரராஜி, எம்.ஏ.ராஜா, பகுதி செயலாளர்கள் குப்புசாமி, நாராயணன், மாநகராட்சி கவுன்சிலர் அருணா விஜயகுமார், நிர்வாகி பி.எஸ்.பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story