அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்


அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காட்டில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமுக்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய அ.தி..மு.க. செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட மீனவர் அணி பொருளாளர் முத்து, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் கார்த்திக், கிளை கழக செயலாளர் சிவ செந்தமிழ்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் சிவமனோகரன் வரவேற்றார். இதில் மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் மாறன், கிளைக் கழக செயலாளர் சிவக்குமார், சூரியமூர்த்தி, குருமூர்த்தி, ராமச்சந்திரன், ரவி, அகோர மூர்த்தி மற்றும் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் இலக்கிய அணி துணை செயலாளர் கபிலன் நன்றி கூறினார். முன்னதாக மாற்றுக் கட்சியை சேர்ந்த தில்லை உள்ளிட்ட 50 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.


Next Story