அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் இல்லத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் குத்தாலம் கஜேந்திரன் தலைமை தாங்கினார். சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணம், மயிலாடுதுறை நகர செயலாளர் அபுதாஹிர், குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் மகா கணபதி வரவேற்றார். இதில் கலந்துகொண்டு பேசிய மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜேந்திரன் வருகிற 24-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள அ.தி.மு.க. முப்பெரும் விழா மாநாட்டிற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பான ஏற்பாடு அதிக அளவில் விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள், 100 வாகனங்களில் தொண்டர்களை திரட்டி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கரத்தினை வலுப்படுத்த வேண்டும் என பேசினார்.மேலும் உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் வளர்ச்சி, பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி,செம்பனார் கோவில்,கொள்ளிடம் நிர்வாகிகள் உள்ளிட்ட மாநில மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.