அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
எட்டயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
எட்டயபுரம்:
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோடைகால வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக நீர் மோர் பந்தலை மாவட்ட முழுவதும் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். அதன்படி நேற்று எட்டயபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் எட்டயபுரம் பஸ்நிலையம் முன்பு நீர், மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, ஆரஞ்சு, அண்ணாசி பழம் ஆகிய பழவகைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் சேர்மன் தாமோதரன், கோவில்பட்டி முன்னாள் சேர்மன் சத்தியா, அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, சீனா (எ) முத்துகிருஷ்ணன், கார்ட்டன் பிரபு, சிவா (எ) சிவசங்கர பாண்டியன், கன்னியப்பன், மனோகரன், ரத்தினம், செல்வி, சாந்தி, ஐஸ் முனியசாமி, மோகன், கார்த்தி மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.