அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
x

அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அரியலூர்

அரியலூரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் பேசுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவர் நெஞ்சுவலி இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட அவரை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்று பார்த்தனர். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி முன்னாள் அமைச்சர்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். செந்தில்பாலாஜி மீது உள்ள ஊழல் வழக்குகளை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க.வினர் கூறி வந்தனர். ஆனால் தற்போது அவரை காப்பாற்றும் விதமாக, இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, வழக்கை விைரவுபடுத்தி, தக்க தண்டனை வழங்கிட வேண்டும் என்று கூறி நாளை(புதன்கிழமை) அரியலூர் அண்ணா சிலை அருகே காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியில் உள்ள அனைத்து அணி பொறுப்பாளர்களும் ஏராளமாக கலந்து கொள்ள வேண்டும், என்றார். கூட்டத்தில் தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர், நகர செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story