அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்


அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்
x

பெரணமல்லூர் நகரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் திறந்து வைத்தார் .

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் நகரில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சியும், தண்ணீர் பந்தல் திறப்பு விழாவும் நடந்தது

பெரணமல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார்.

அமைப்பு செயலாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் ஆர்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் ஏ.கே. எஸ்.ஜவகர் என்ற அறிவழகன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பழ வகைகள், சர்பத் மோர், தண்ணீர், இளநீர் தர்பூசணி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வாழ்த்தி பேசினார்.

முன்னதாக அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு ஒன்றியம் நகர நிர்வாகிகளிடம் படிவங்களை வழங்கி அதிக அளவில் சேர்த்து வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஆரணி நகராட்சி துணைத்தலைவர் பாரி பி.பாபு, முன்னாள் நகர செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய பொருளாளர் எத்திராஜ், செப்டாங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், ஒன்றிய அவைத் தலைவர் கஜேந்திரன்,

ஒன்றிய துணை செயலாளர் முனியன் , மாவட்ட பிரதிநிதி அமான் பாஷா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் கோவிந்தசாமி, இளைஞர் அணி அமைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், யுவராஜ், சரண்ராஜ் கோபால், மணிகண்டன், வயலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்பட அ.தி.மு.க.வினர், நகர வார்டு கிளை செயலாளர், ஒன்றிய கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர.

முடிவில் ஆர்.சேகர் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story