அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) அணி செயலாளர் பிறந்தநாள் விழா
மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) அணி செயலாளர் பிறந்தநாள் விழா நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேண்டிருப்பில் ஓ.பி.எஸ். அணி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் குத்தாலம் T.கஜேந்திரன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மகன் மருத்துவர் ஆனந்தபிரபு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதே போல குத்தாலம் அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர்ஆனந்த், தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் மகா கணபதி, நகர செயலாளர் அபுதாஹிர், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராஜ், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாரதிராஜா,தரங்கை பேரூர் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி, குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மனோகரன், அ.ம.மு.க. மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ராகுல்ராஜ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் குத்தாலம் T.கஜேந்திரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.