அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரின் சேலையில் தீப்பற்றியதால் பரபரப்பு


அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரின் சேலையில் தீப்பற்றியதால் பரபரப்பு
x

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரின் சேலையில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது

திருச்சி

துறையூர்,செப்.3-

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை வரவேற்று திருச்சி மாவட்டம் துறையூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

துறையூர் பாலக்கரையில்அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சரோஜா தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சரோஜாவின் சேலையில் தீப்பற்றியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கட்சியினர் சரோஜாவின் சேலையில் பற்றிய தீயை அணைத்தனர். இதனிடையே அவர் மயங்கினார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின் எழுந்த சரோஜா மீண்டும் கட்சியினருடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story