ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர்
மறைந்த முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஜெயலலிதாவின் முழு உருவ சிலைக்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் சிலைக்கும், உருவப்படத்திற்கும் பொதுமக்களும் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story