ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அ.தி.மு.க.ஊராட்சி தலைவி கைது


ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அ.தி.மு.க.ஊராட்சி தலைவி கைது
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவியை போலீசார் கைது செய்தனர்.

ஊராட்சி தலைவர்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்ப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணி. விவசாயி. இவரது மனைவி வேணிமணி கீழ்ப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த எம்ஜிஆர் என்பவர் 2021- 22-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டது. அவரும் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் எம்ஜிஆர் ஊராட்சி மன்ற தலைவி வேணி மணியிடம் சென்று, வீட்டு ரசீது இதுவரை தரவில்லை. எனவே வீட்டு ரசீது தாருங்கள், என்று கேட்டார்.அப்பொழுது, ''நீ வீடு கட்டியதற்கு எனக்கு எதுவும் செலவுக்கு பணம், கொடுக்கவில்லை ரூ.30 ஆயிரம் கொடுத்தால் வீட்டு ரசீது தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன்'' என்று கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத எம்ஜிஆர் மன வேதனை அடைந்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரெண்டு வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், கோபிநாதன், முருகன் மற்றும் போலீசார் உடன் சென்று நேற்று காலை ரூ.30 ஆயிரத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவி எம்.ஜி.ஆர். இடம் கொடுத்து ஊராட்சி மன்ற தலைவர் வேணிமணியிடம் கொடுக்கும்படி கூறினர்.

கைது

அதன்படி ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்துடன் ஊராட்சி தலைவி வேணிமணியிடம் லஞ்சமாக கொடுக்க எம்ஜிஆரங் சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீசாரும் மாறு வேடத்தில் சென்று அங்கு தயாராக இருந்தனர்.

ஊராட்சி மன்ற தலைவியிடம் வேணிமணியிடம் எம்ஜிஆர் அதனை கொடுத்தபோது அதனை அவர் பெற்றுக்கொண்டார். அப்போது மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் வேணிமணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story