அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு
அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் அம்பை, சேரன்மாதேவி யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 7 பேரூராட்சி பகுதிகளுக்கும் உட்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கினார். விழாவில் ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜய பாலாஜி, சேரன்மாதேவி மாரிசெல்வம், நகர செயலாளர்கள் அம்பை அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், கல்லிடைக்குறிச்சி முத்துகிருஷ்ணன், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி, மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story