அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் உயிரிழப்பு, போதைப் பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில், மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Next Story