கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

விலைவாசி உயர்ைவ கண்டித்து கும்பகோணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து கும்பகோணம் மாநகர அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராம. ராமநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் பத்ம.குமரேசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ராம.ராமநாதன் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் விலை உயர்வு, வரி உயர்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. ஆனால் தி.மு.க. பதவியேற்ற 2 ஆண்டுகளுக்குள்ளாகவே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பஸ் டிக்கெட் விலை உயர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி மக்களை துன்புறுத்தி வருகின்றனர். கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் சாலைகள் சேதமடைந்தும், பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறியும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்றார்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி பிரிவு செயலாளர் லெனின், தாராசுரம் பேரூர் செயலாளர் கோவி.கேசவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பகுதி செயலாளர் ராஜு நன்றி கூறினார்.


Next Story