நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

நாகையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நாகை அவுரித்திடலில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அவைத்தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஆசைமணி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் தங்க.கதிரவன் வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய, நகர, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். குடிநீர் வரி, கழிவு நீர் இணைப்பு வரி உள்ளிட்டவற்றை உயர்த்தக்கூடாது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றை நிறுத்தக்கூடாது. சட்டஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

நாகை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்படும் தீவிபத்தை தடுக்க வேண்டும். குப்பை தொட்டிகளை வைத்து முறையாக குப்பைகளை அள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story