அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது, அதன்படி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு எதிரே விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், சந்திரபிரபா, வரதராஜன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்திமான்ராஜன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கலாநிதி, விருதுநகர் நகர செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி. சரவணகுமார், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கோஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும் அவர்கள் பதவி விலக கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story