ராமேசுவரத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ராமேசுவரத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்த எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ராமேசுவரம் என்.எஸ்.கே .வீதியில் நேற்று அ.தி.மு.க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. கட்சியின் நகர் பொருளாளர் தர்மர் மற்றும் நிர்வாகிகள் சரவணன், முத்துராமலிங்கம், முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர்.ஆனால் அதை போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story