அ.தி.மு.க. மாநாட்டில் கனிமொழியை விமர்சித்து பாடல்: போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க. மகளிர் அணியினர் புகார்
அ.தி.மு.க. மாநாட்டில் கனிமொழியை விமர்சித்து பாடல்: போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க. மகளிர் அணியினர் புகார்
தி.மு.க. ஈரோடு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் திலகவதி, பாண்டியம்மாள் மற்றும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி நடராஜன் ஆகியோர் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
மதுரையில் கடந்த 20-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யை தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் பாடல் பாடப்பட்டது. மேலும் இந்த பாடல் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை ஈரோடு மாவட்ட மகளிர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் மதுரை மாநாடு நிகழ்ச்சியை நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும், கனிமொழி எம்.பி.யை தரக்குறைவாக விமர்சித்து பாடியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.