அ.தி.மு.க. மாநாடு குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் பணி
அ.தி.மு.க. மாநாடு குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.
விருதுநகர்
மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதை அனைத்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அனைத்து வாகனங்களிலும் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டும் பணியை காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமையில் காரியாபட்டி முக்கு ரோட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அவைத்தலைவர் ஆவியூர் ரவி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் ரமேஷ், காரியாபட்டி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஆவியூர் குண்டு குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story