அ.தி.மு.க. ஆதரவு பெண் வேட்பாளர் 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி


அ.தி.மு.க. ஆதரவு பெண் வேட்பாளர் 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பதிவான ஓட்டுகள் மறுஎண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளர் சவுந்திரவடிவு 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கோர்ட்டு அறிவித்தது.

கோயம்புத்தூர்

கோவை

சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பதிவான ஓட்டுகள் மறுஎண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளர் சவுந்திரவடிவு 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கோர்ட்டு அறிவித்தது.

சின்னதடாகம் ஊராட்சி தலைவர்

கோவை மாவட்டம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. ஆதரவு பெற்ற சவுந்திரவடிவு, தி.மு.க. ஆதரவு பெற்ற சுதா ஆகியோர் போட்டி யிட்டனர்.

இதில் சுதா 2,553 ஓட்டுகளும், சவுந்திரவடிவு 2,549 ஓட்டுகளும் பெற்றனர். இதன் மூலம் 4 ஓட்டு வித்தியாசத்தில் சுதா வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஓட்டுகள் எண்ணப்பட்டு அ.தி.மு.க. ஆதரவு பெற்ற சவுந்திரவடிவு 2,554 ஓட்டுகள், சுதா 2,551 ஓட்டுகள் பெற்றதாகவும், இதனால் சவுந்திரவடிவு 3 ஓட்டுகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கோர்ட்டு அறிவிப்பு

இதை எதிர்த்து வேட்பாளர் சுதா கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து கோர்ட்டு உத்தர வின்பேரில் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பதி வான ஓட்டுகள் மறுஎண்ணிக்கை கடந்த 24-ந்தேதி நடைபெற்றது.

அந்த முடிவுகள் மூடி சீல் வைக்கப்பட்டு கலெக்டர் மூலம் கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் தாக்கல் செய்யப் பட்டது. இந்த நிலையில் நேற்று கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்திரவடிவு 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டு அறிவித்தது.

மறுஓட்டு எண்ணிக்கை

பதிவான மொத்த ஓட்டுகள்- 5,375

சவுந்திரவடிவு (அ.தி.மு.க. ஆதரவு) - 2,553

சுதா (தி.மு.க. ஆதரவு) - 2,551

சுயேச்சை வேட்பாளர்- 65

செல்லாத ஓட்டுகள் - 206

இதைத்தொடர்ந்து கோர்ட்டுக்கு வந்த சவுந்திர வடிவுக்கு அ.தி.மு.க. வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வெற்றி பெற்ற சவுந்திரவடிவு கூறும் போது, இந்த வெற்றி தர்மத்துக்கு கிடைத்த வெற்றி. நான் சின்னதடாகம் ஊராட்சி மக்களுக்கு தலைவராக தொடர்ந்து பணியாற்றி நலத்திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றார்.

மேல்முறையீடு

தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதா சார்பில் ஆஜரான வக்கீல் அருள்மொழி கூறும்போது, இருமுறை ஓட்டு எண்ணும் போதும் மொத்த ஓட்டுகள் 5,374 என்று இருந்தது. தற்போது மறு ஓட்டு எண்ணிக்கையில் மொத்த ஓட்டு 5,375 என்று கலெக்டரின் அறிக் கையில் கூறப்பட்டு உள்ளது. எனவே இந்த வெற்றி செல்லாது என்று மேல்முறையீடு செய்வேன் என்றார்.

இதையடுத்து அவர், மொத்த ஓட்டு வித்தியாசம் குறித்து மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதி ராஜசேகரிடம் மனு தாக்கல் செய்தார்.


Next Story