அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனத்திற்கு உற்சாக வரவேற்பு


அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனத்திற்கு உற்சாக வரவேற்பு
x

திருவண்ணாமலைக்கு வந்த அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தயார் செய்யப்பட்டு உள்ள பிரசார வாகனம் அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த வாகனம் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று வருகிறது.

இந்த பிரசார வாகனம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு இன்று மாலை வந்தது. இதற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மற்றும் நகர அ.தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம் வரவேற்றார்.

இந்த வாகனம் முக்கிய வீதிகள் வழியாக வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் நோக்கி சென்றது. பிரசார வாகனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளில் அணிவகுத்தபடி அ.தி.மு.க.வினர் கட்சி கொடியை ஏந்தியபடி சென்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் இ.என்.நாராயணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குணேசேகரன், ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், சரவணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் பிரிவு சஞ்சீவிராமன், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் போர்மன்னன்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக போளூருக்கு வந்த பிரசார வாகனத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட துணை செயலாளர் ஏ.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஏ.ராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் ஜெயசுதாலட்சுமி காந்தன், போளூர் அவைத்தலைவர் ஏழுமலை, நகர செயலாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story