அ.தி.மு.க. கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அடிப்படை வசதிகள் கேட்டு அ.தி.மு.க. கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
காரமடை
காரமடை நகராட்சியில் 27-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.வி. நகர் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அப்பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர கோரி காரமடை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். மேலும் அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரால், பொதுமக்கள் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், சாலை வசதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் அந்த வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வனிதா சஞ்சீவ்காந்தியிடம் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மன்ற கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்து விரைவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களுடன் சேர்ந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவேன் என தெரிவித்தார்.இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.