அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை


அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை
x

கடையநல்லூர், சங்கரன்கோவில் தர்காகளில் அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை செய்தார்.

தென்காசி

கடையநல்லூர்:

அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று கடையநல்லூருக்கு வந்தார். அங்குள்ள மக்தும் ஞானியார் தர்கா, பெரியதெரு சேகனா வலியுல்லா தர்கா உள்ளிட்டவற்றில் மலர் கம்பளம் விரித்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

பின்னர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறுகையில், 'எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவியேற்க வேண்டியும், அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக வரவேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் 68 இடங்களில் உள்ள தர்காக்களில் பிரார்த்தனை செய்ய முடிவு செய்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் கடையநல்லூர் பகுதியில் உள்ள தர்காகளில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டேன்' என்றார்.

நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் மற்றும் கடையநல்லூர் நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் சங்கரன்கோவில் திருநீலகண்டர் ஊருணி சாலையில் உள்ள முகம்மதுபட்டாணி தர்காவில் பிரார்த்தனை செய்தார். அப்போது, நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், செல்வராஜ், வேல்முருகன், தலைமை கழக பேச்சாளர்கள் எம்.கணபதி, ராமசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் சென்றனர்.


Next Story