மதுரை மாநாட்டுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வரும்படி எம்.எல்.ஏ.அழைப்பு
மதுரை மாநாட்டுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வர வேண்டும் என மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ.அழைப்பு விடுத்துள்ளார்.
அரக்கோணம்
மதுரை மாநாட்டுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வர வேண்டும் என மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ.அழைப்பு விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை 2 கோடி தொண்டர்களாக உயர்த்தி, தொண்டனுக்கு தொண்டனாக நம்மில் ஒருவராக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தனது பலத்தை நிரூபிக்கவும், மு.க.ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மீண்டும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை அமைக்க அதே அரசியல் தலைநகராம் மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை வருகிற 20-ந்் தேதி நடத்த உள்ளார்.
அந்த மாநாடு அ.தி.மு.க.விற்கு திருப்பு முனையை ஏற்படுத்துகிற மாநாடாக அமைவதற்கு, அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக, அலைகடல் போல் ஆர்பரித்து வருகை புரிந்து, மதுரையில் அ.தி.மு.க. ஒரு புதிய அத்தியாயம் படைத்திட வாரீர் என இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.