அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 10:43 PM IST (Updated: 12 July 2023 4:22 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஆர்.ஜி.கே.நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 14,226 படிவங்களின் மூலம் புதிதாக 3,55,650 உறுப்பினர்களை சேர்க்க கடுமையாக உழைத்த நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்.

மேலும் மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகை செய்யும் மாநாடு ஆகும். எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து திரளான நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது உழைக்கவேண்டும் அதேபோல 19 பேர் கொண்ட பூத் கமிட்டியை ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், மாவட்ட இணை செயலாளர் கீதாசுந்தர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேதுராமன், நகர செயலாளர்கள் கே.பி.சந்தோஷம், டபுள்யூ.ஜி.மோகன், ஜிம்.சங்கர், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல்.கார்த்திகேயன், பெல்.தமிழரசன், சொறையூர் குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story