அ.தி.மு.க. தொண்டர் படையினர் மதுரைக்கு பயணம்


அ.தி.மு.க. தொண்டர் படையினர் மதுரைக்கு பயணம்
x

அ.தி.மு.க. தொண்டர் படையினர் மதுரைக்கு பயணம் மேற்கொண்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தாமரை ராஜேந்திரன், மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாட்டிற்கு தொண்டர் படை குழுவின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு நூற்றுக்கணக்கான தொண்டர் படையினரை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் அனைவருக்கும் அடையாள அட்டை, சீருடைகளை வழங்கி 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களை மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், அவைத்தலைவர் ராம ஜெயலிங்கம் மற்றும் பொறுப்பாளர்கள் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர்.


Next Story