''அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்தால் சந்திப்போம்''


அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்தால் சந்திப்போம்
x

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது தொடர்பாக அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்தால் சந்திப்போம்’’ என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:- ''ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. மக்களிடம் தி.மு.க. பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு இருப்பதாக கூறுவது முட்டாள்தனமானது. ஆறுமுகசாமி அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையையும் மக்கள் முன்பாக வைத்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் வேலை பார்த்தது தவறா? களப்பணியாற்றுவது தவறா? மக்கள் எங்களோடு வருவது, ஆதரவு தருவது தவறா?. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அ.தி.மு.க. தான் நாடகமாடுகிறது. தோல்வி பயத்தால் `ஈரோடு பாா்முலா' என்பதை அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். பொதுமக்களுக்கு எங்கு தந்தீர்கள் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். அதற்கு பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என பதில் அளித்ததில் என்ன தப்பு?. தேர்தலில் வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கம் தான். அதுபோல பட்ஜெட் தொடரில் அறிவிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. இதில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்தால் சந்திப்போம்''. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story