பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் நாளை அஞ்சலி


பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் நாளை அஞ்சலி
x

கோப்புப்படம்

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் நாளை அஞ்சலி செலுத்த உள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூரில் 1920-ம் ஆண்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் வீரமரணம் அடைந்தனர்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்திடும் வகையில், நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு அங்குள்ள வீர தியாகிகள் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா, மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அதனைத்தொடர்ந்து சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் எம்.பி.-எம்.எல்.ஏ.வுமான பி.கே.மூக்கையா தேவர் 101-வது பிறந்தநாளையொட்டி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மரியாதை செலுத்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story