அ.தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டம்


அ.தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், தென்காசி பழைய பஸ்நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், தென்காசி நகர செயலாளர் சுடலை, மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாத பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 92 பேரை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கைது செய்து, கீழப்புலியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சங்கரன்கோவில்- கடையநல்லூர்

சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு, முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை செயலாளர் சிவானந்த், நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், மகாராஜன், வேல்முருகன், செல்வராஜ், வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை ேபாலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை- சிவகிரி

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவா் வி.பி.மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வாசுதேவநல்லூர் ஒன்றியத்தின் சார்பில் சிவகிரி பஸ்நிலையம் அருகே காந்தி கலை கலையரங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சாலை மறியல் செய்ய முயன்றதாக 54 பேரை சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.



Next Story