வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்ய முடிவு


வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்ய முடிவு
x

ஒற்றை சாளர முறையில் வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்ய முடிவு என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நாமக்கல்

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல அலுவலகத்தில் நேற்று முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல துணை தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் சிங்கராஜ் வாங்கிலி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு, முட்டைக் கோழிப் பண்ணை தொழிலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருத்துக்கணிப்பு வாக்குப்பதிவு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல அலுவலகத்தில் நடத்துவது. 3 விதமான தலைப்புகளில் பண்ணையாளர்களின் கருத்தை அறியும் நோக்கில் ஒரு பண்ணையாளருக்கு 3 வாக்கு சீட்டுகள் என தனித்தனியாக மூன்று வண்ணங்களில் வாக்கு சீட்டுகள் அடிப்பது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பண்ணையாளர்கள் வாக்குகளை செலுத்த அனுமதிப்பது. மாலை 6 மணியளவில் வாக்குகளை எண்ணி, முடிவு அறிவிப்பது.

இனிவரும் காலங்களில் பண்ணையாளர்கள் முட்டை விற்கும் போது, கண்டிப்பாக வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள வியாபாரிக்கு முட்டைகளை விற்க வேண்டும் என முட்டை கோழி பண்ணையாளர்களை கேட்டுக்கொள்வது. வருகிற 11-ந் தேதி காலை 10 மணி அளவில் முதிர்வு கோழி வியாபாரிகளுடன் கலந்துரையாடல் செய்து வரும் காலங்களில் முதிர்வு கோழி விற்கும்போது, ஒற்றைச் சாளர முறையில் வயது முதிர்வு கோழிகளை விற்பனை செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story