வக்கீல் சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
நீதித்துறையில் சட்டங்களின் பெயர்கள் இந்தி, சமஸ்கிருத மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் வக்கீல் சங்க கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு திருப்பூர் பார் அசோசியேசன் தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரகுபதி, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுந்தரேஸ்வரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர். இதில் மூத்த வக்கீல்கள் கே.என்.சுப்பிரமணியம், பாப்பா மோகன் உள்பட மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.