பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
திருப்பூரில் பெண் வக்கீல்கள் சார்பில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 'மணிப்பூர் மகள்களை பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல்கள் தமயந்தி, முத்துலட்சுமி, திங்களவள், சத்தியா, இந்திராகாந்தி, மோகனாம்பாள், சவுமியா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மூத்த பெண் வக்கீல்கள்பங்கேற்றனர்.
மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். பெண்கள் மீதான வன்கொடுமைகளை செய்த குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் திரளான பெண் வக்கீல்கள் பங்கேற்றனர்
Next Story