மோட்டார் சைக்கிளில் சாகசம்; 6 பேர் கைது
மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாகசம்
மதுரை தல்லாகுளம் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சொக்கிகுளம் வல்லபாய் மெயின் ரோடு பகுதியில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து வருவதாக தகவல் கிடைத்தது.. உடனே போலீசார் விரைந்து சென்று அங்கு சாகசத்தில் ஈடுபட்ட 5 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள் ஜம்புரோபுரம் பெருமாள்சாமி தெருவை சேர்ந்த சுப்பிரமணியராஜ் (வயது 20), பிரகாஷ் (20), செல்லூர் பாரதி தெரு அசாருதீன் (20), கோரிப்பாளையம் சோமசுந்தரம் தெரு முகமது உமர் பாரூக் (23), செல்லூர் தியாகி பாலு தெரு ராமமூர்த்தி (19) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக மோட்டார் சைக்கிள் சாகசம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
இதே போன்று சிந்தாமணி-பழையகுயவர்பாளையம் ரோடு சந்திப்பில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற காமராஜர்புரம், முத்துராமலிங்கம் தெரு சின்ன முனீஸ் மகன் சண்முகவேல் (19) என்பவரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.