சாலையோர மரங்களை சிதைக்கும் விளம்பர பதாகைகள்


சாலையோர மரங்களை சிதைக்கும் விளம்பர பதாகைகள்
x
தினத்தந்தி 6 May 2023 6:45 PM GMT (Updated: 6 May 2023 6:46 PM GMT)

சாலையோர மரங்களை சிதைக்கும் விளம்பர பதாகைகள் பொதுமக்கள் கருத்து

கடலூர்

கடலூர்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது பழமொழி. ஆனால் ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை. இயற்கையின் வரம் என்று சிறப்பிக்கப்படும் மரங்களின் முக்கியத்துவத்தை விளக்க விளக்கங்கள் ஏதும் தேவையில்லை.

ஆபத்துகளை சந்திக்கும் மரங்கள்

ஆனால், மனித இனத்துக்கு எவ்வளவு பயன்களை தந்தாலும் மரங்கள் மனிதனால் ஆபத்துகளையே சந்திக்கின்றன. வாகன பெருக்கத்தை எதிர்கொள்ளவும், சாலைகளில் காற்று மாசை தடுப்பதிலும் மரங்கள் முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக ஓர் ஆண்டுக்கு 41,843 என்ற வீதத்தில் ஓடும் ஒரு வாகனம் வெளிப்படுத்தும் கரியமில வாயுவை எதிர்கொள்ள ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் தேவைப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் பெருகி வரும் நவீன சாலைகளால் சாலையோர மரங்கள் ஒரு புறம் அப்படியே அழிக்கப்பட, மறுபுறம் எஞ்சியுள்ள மரங்களும் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கின்றன.

சாலையோர மரங்களில் ஆணிகளால் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் விளம்பர பதாகைகள் அடிப்பது, மரங்களுக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது. இவ்வகை விளம்பர உத்தி பல்லாண்டு காலமாக தொடர்வது தான் என்றாலும், அண்மை காலமாக புற்றீசல்போல் பெருகிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் இவ்வகை விளம்பரத்தை அதிக அளவில் செய்து வருகின்றன. இதனால் விளம்பர பதாகைகள் அற்ற சாலையோர மரங்கள் அரிது என்று சொல்லக்கூடிய அளவுக்கு இப்போது நிலைமை மாறி விட்டது.

விளம்பர பதாகைகளுடன் அடிக்கப்படும் ஆணிகள் மரத்தினுள் ஆழப்பதிந்து மரத்தின் உள்பாகங்களை சிதைப்பதுடன் மரத்தின் வளர்ச்சியையும் பாதிக்கின்றன.

இதுகுறித்து கடலூர் மாவட்ட மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஆக்சிஜன் குறைபாடு

விருத்தாசலத்தை சேர்ந்த ஹஜ்ஜி முகம்மது: சாலை யோரங்களில் உள்ள மரங்களை பாழ்படுத்தும் வகையில் ஆணி அடித்து மாட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும். சாலையோர மரங்களில் விளம்பரங்கள் அமைத்தல் வனச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் ஆனால் பல இடங்களில் இது மீறப்படுவதால் மரங்களில் அறிவிப்புகள், விளம்பரங்கள் அடங்கிய அட்டைகள் தொங்குகின்றன. சாலையில் செல்வோரை ஈர்க்கவும், எவ்வித செலவுமின்றி தங்கள் பொருட்களையும், நிறுவனங்கள் குறித்த விவரத்தையும் மக்களிடையே கொண்டு சேர்க்கவும் வணிகர்கள் இந்த யுக்தியை கையாளுகின்றனர். எனவே நிழல் தரும் மரங்கள் விளம்பர தாங்கிகளாக மாறி வருகின்றன. இந்த விளம்பர பதாகைக்காக ஆணி அடிப்பதன் மூலம் பனைமரம் பாதிப்படைந்து பின்னாளில் பெரிய அளவில் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு செய்வதால் மரத்தின் இதர பாகங்களுக்கு செல்லும் நீர், உணவு ஆகியவை தடைபடுகின்றது. நீர், உணவில்லாமல் தவிக்கும் மரங்கள் மெல்ல மெல்ல தங்கள் வாழ்நாளை இழந்து உயிர் விடுகின்றன. மரங்கள் இல்லாமல் போனால் மனிதனுக்கு வேண்டிய ஆக்சிஜன் குறையும். இதனால் மனிதனின் வாழ்நாளும் குறையும் சூழல் உருவாகும். எனவே மரங்களில் விளம்பர பதாகைகள் தொங்க விடுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோல் தங்கள் சுயநலத்திற்காக விளம்பரம் செய்பவர்களை 100 மரங்களை நட்டு வளர்த்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு உருவாக்கினால் வருங்கால தலைமுறையினருக்கு ஆக்சிஜன் குறைபாடு இன்றி கிடைக்கும்.

அபராதத்துடன் நடவடிக்கை

மன்னம்பாடியை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் தமிழரசன்:- மரத்தில் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை வைக்கும் போது மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை ஓரங்களில் தற்போது வளர்ந்து வரும் மரக்கன்றுகளில் இது போன்ற ஆணிகளை அடித்து விளம்பர பதாகைகளை மாட்டும் போது அந்த மரத்தின் வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் பலன் தரும் புளி, மா உள்ளிட்ட மரங்களில் காய்க்கும் தன்மையும் பாதிக்கும். நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் சென்று கொண்டிருப்பவர்கள், இந்த விளம்பர பதாகைகளை மாட்டும்போது அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதால் விபத்துகள் நடைபெறுகிறது. நெடுஞ்சாலை ஓரங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற மரக்கன்றுகளில் ஆணி அடிக்கும் போது மரம் பட்டுப்போய் விடும். மரத்தை துளைக்கும் பூச்சிகள் எளிதில் தாக்கும். மரம் இல்லையென்றால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். கார்பன் மோனாக்சைடு அதிகரிக்கும். அரசு மரம் வைக்க வேண்டும் என கூறினால் மட்டும் போதாது. மரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஆனால் மரத்தை செதுக்கி பெயிண்ட் அடித்து இது நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட மரம் என தெரிவதற்காக எண்ணிக்கையை போடுகிறார்கள். இவ்வாறு மரத்தை செதுக்கி எண்ணிக்கை போடும்போது நாளடைவில் அந்த மரத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட இடம் மிகப்பெரிய துளையாக மாறி அந்த மரத்திற்கே பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை அரசு அதிகாரிகளும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மரத்தில் விளம்பர பதாகைகளை வைக்கும் தனியார் நிறுவனங்கள் மீது அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒளிரும் வில்லைகள் பொருத்தம்


Next Story