காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை
காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காரைக்குடி,
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று(சனிக்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை 6 மணி அளவில் வாக்குச்சாவடி முகவர்களுடன் தேர்தல் பணி ஆலோசனைகள் குறித்து காணொலிக்காட்சி வாயிலாக நேரடியாக கலந்துரையாட உள்ளார். மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான காணொலிக்காட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்று மு.க.ஸ்டாலினின் அறிவுரைகளை பின்பற்றி தேர்தல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டம் காரைக்குடி அபூர்வா திருமண மஹால், சிவகங்கை ஆர்.எம்.ஆர். திருமண மஹால், மானாமதுரை அனுசூயா மஹால், திருப்பத்தூர் சண்மீனாள் திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.