காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை


காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை

மயிலாடுதுறை

திருவெண்காடு:

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 25-ந் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது. அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 64 தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து நேற்று சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- சரியான நேரத்திற்கு மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் எனவும், மேலும் அதனை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன், ஒன்றிய மேலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story