உத்தமர் காந்தி விருதுக்குசிறந்த ஊராட்சிகளை தேர்வு செய்வது குறித்து ஆலோசனைகலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது
உத்தமர் காந்தி விருதுக்கு சிறந்த ஊராட்சிகளை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் உத்தமர் காந்தி விருதுக்கு சிறந்த கிராம ஊராட்சிகளைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) மணி, மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குனா் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசுகையில், கிராம ஊராட்சிகளில் வெளிப்படைத்தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்கை எட்டிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படுகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உத்தமர் காந்தி விருதிற்கு தகுதியான சிறந்த 5 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நமது மாவட்டத்திலும் சிறந்த ஊராட்சிகளை தேர்வு செய்து, அதற்கான முன்மொழிவினை அரசுக்கு அனுப்ப அதிகாரிகள் ஒத்துழைக்கவேண்டும் என்றார். இதில் அரசு சாரா நிறுவனம், மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.