தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை


தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:46 PM GMT)

விழுப்புரம் நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமை தாங்கினார். நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் முன்னிலை வகித்தார். விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள சில வார்டுகளில், கோடை காலத்தை முன்னிட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.இக்கூட்டத்தில் நகரமன்ற கவுன்சிலர்கள் புல்லட் மணி, ஆவின் செல்வம், வித்தியசங்கரி, சிவக்குமார், கலையரசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story