சுல்தான்பேட்டையில் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை


சுல்தான்பேட்டையில் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டையில் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை வட்டாரத்தில் மக்காச்சோளம் ராபி பருவத்தில் 3,800 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரில் படைப்புழுக்களின் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் படைப்புழுக்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் இடையர்பாளையம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதில், தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழகம் பூச்சியல் துறை வல்லுநர் சீனிவாசன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- மக்காச்சோளம் விதைப்புக்கு முன்பாக உழவு மேற்கொள்வதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.

விதைப்புக் காலத்தில் விவசாயிகள் அனைவரும் ஒரே காலத்தில் விதைக்க வேண்டும். பல்வேறு கால கட்டங்களில் விதைப்பு மேற்கொண்டால் வளர்ச்சி அடையும் நிலையில் மக்காச்சோளம் பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுக்கள் அதிக அளவில் தாக்கும். விதைப்புக்குமுன் ஒரு கிலோ விதைக்கு, பேவேரியா பேசியானா10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதலை குறைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். முகாமில், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணவேணி, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகல்னா, வேளாண் அலுவலர்கள் குருசாமி, ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story