தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து விவசாயிகளின் ஆலோசனை கூட்டம்


தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து விவசாயிகளின் ஆலோசனை கூட்டம்
x

தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி, கள்ளப்பட்டி, கடம்பூர், அரசடிக்காடு, அரும்பாவூர், மலையாளப்பட்டி, பெரியம்மாபாளையம், வீரகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் காய்கறிகள் பயிரிட்டு உரிய முறையில் சந்தைப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து பூலாம்பாடி தொழிலதிபர் பிரகதீஸ்குமார் விவசாயிகளை நேரில் சந்தித்து தினசரி காய்கறி மார்க்கெட்டை பூலாம்பாடியில் அமைப்பதற்கும், இங்கிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் விவசாயிகளின் முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தற்போது வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களில் இருந்து விவசாயிகளை ஒன்றிணைத்து 2-வது கட்ட ஆலோசனை கூட்டம் பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தினசரி மார்க்கெட்டுக்கு தேவையான அளவிலும், ஏற்றுமதிக்கு தேவையான அளவிலும் போதிய காய்கறிகளை உற்பத்தி செய்வது என்று முடிவெடுத்தனர். அப்போது வேளாண் அறிவியல் மைய தலைவர் நேதாஜி மாரியப்பன், வேளாண் வணிக அலுவலர் சத்தியா, கால்நடை அலுவலர் ஜீவா மற்றும் பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். மேலும் தோட்டக்கலை துறையினர் கலந்து கொண்டு காய்கறிகளை விதை நேர்த்தி செய்வது, பயிரிடுவது, மானியங்கள் பெறுவது உள்ளிட்ட கருத்துக்களை வழங்கினார்கள். வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு வங்கிகளில் கடன் பெறும் முறைகள் குறித்து விளக்கி கூறினார்கள்.


Next Story