விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்


விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
x

விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விவசாயி சேதுபாண்டியன் தலைமை தாங்கினார். புதூர் வட்டார மானாவாரி கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் பால்ராஜ், செயலாளர் ராம் பிரசாத், துணை தலைவர் விஜயகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த 2020-21 -ஆம் ஆண்டிற்கான நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை இன்னும் 15 நாட்களுக்குள் வழங்கவில்லை என்றால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்ட தினத்தன்று கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது, விவசாயத்திற்காக வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதில் பெரும் சிக்கலும், கால விரயமும் ஆவதால், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே அனுமதி அளித்தால் போதுமானது என்ற உத்தரவு பிறப்பிக்க கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story