டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம்
நாமக்கல்லில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது.நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் நீதிநாயகம் தலைமை தாங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை ஐகோர்ட்டு அறிவித்தப்படி டாஸ்மாக் பணியாளர்களின் பணி நேரத்தை குறைக்க வேண்டும். உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வருகிற 26-ந் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. மாநில ஒருங்கிங்கிணைப்பாளர் சீனிவாசன், டாஸ்மாக் விற்பனையாளர் சங்க நிர்வாகி லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.