திருச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்


திருச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திருச்சியில் நடைபெற உள்ள ஓ.பன்னீர் செல்வம் அணி மாநாட்டு ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சியில் நடைபெறும் மாநாடு ஒரு திருப்புமுனையாக அமையும். இந்த மாநாட்டில் கட்சி தொண்டர்கள் உரிமை மீட்கப்படும். சிவகங்கை மாவட்டத்திலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் செல்கின்றனர். அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக் கூடாது என கூற முடியாது. அ.தி.மு.க. கொடியை சட்டையாக கூட தைத்து போட்டுக் கொள்வோம். யாரும் கேள்வி கேட்க முடியாது. கோடநாடு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற என்தை இந்த மாநாடு வலியுறுத்தும். சசிகலா கட்சியை ஒற்றுமைபடுத்த வேண்டும் என கூறுகிறார். ஆனால் கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் எடப்பாடி பழனிசாமியை வேண்டாம் என்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் வக்கீல் ராமநாதன், மாநில நிர்வாகி ஆசைத்தம்பி, தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், காரைக்குடி நகர செயலாளர் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story