அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் இப்ராம்ஷா, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளரும், சிங்கம்புணரி ஒன்றிய குழுத்தலைவருமான திவ்யாபிரபு ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். இதற்கான ஏற்பாட்டினை இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.உமாதேவன், நாகராஜன் ஒன்றியச் செயலாளர்கள் சிவமணி, ராமலிங்கம், நகரச் செயலாளர் இப்ராம்சா, முன்னாள் யூனியன் சேர்மன் கரு.சிதம்பரம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் முருகேசன், நகர தொழில்நுட்ப பிரிவு நவநீதபாலன், ஆத்தகரைப்பட்டி ஆறுமுகம், வார்டு கவுன்சிலர் ராபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.