அ.தி.மு.க.ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க.ஆலோசனை கூட்டம் நடந்தது
சிவகங்கை
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சிவகங்கை நகர் 8-வது வார்டு, மற்றும் மதகுபட்டி, சக்கந்தி, பச்சேரி, நாட்டரசன் கோட்டை 12-வது வார்டு, பாகனேரி, முத்தூர் வாணியங்குடி, புல்லுக்கோட்டை, ஆகிய ஊர்களில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிவகங்கை நகர் செயலாளர் என்.எம்.ராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் பில்லூர் ராமசாமி, கோமதி தேவராஜ், ஒன்றிய செயலாளர் கருணாகரன், செல்வமணி, ஸ்ரீதர், பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ராமு இளங்கோவன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் மானாகுடி சந்திரன், 8-வது வார்டு உறுப்பினர் ராபர்ட், மருத்துவ அணி செயலாளர் கோட்டையன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அசோக் நகர் வி.ஆர்.பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திகை சாமி, சரவணன், சத்யேந்திரன், நாட்டரசன்கோட்டை பேரூர் செயலாளர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.