ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம் நடந்தது
இளையான்குடி
இளையான்குடியில் காங்கிரஸ் கட்சியின் வட்டார அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. மற்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, பொதுக்குழு உறுப்பினர் அல் அமீன், நகர தலைவர் ஜபருல்லா கான், நகர செயலாளர் பாண்டி, சிறுபான்மை பிரிவு தலைவர் ராவுத்தர் நயினார் அம்பலம், மாவட்ட எஸ்.சி. பிரிவு செயலாளர் குமார், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, சாலைக் கிராமம் நகர் தலைவர் விஜயகுமார், அண்டக்குடி கணேசன், திருவள்ளூர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட, வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.