முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்


முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2023 1:00 AM IST (Updated: 12 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், தாசில்தார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலை துறையினர், வனத்துறையினர், போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், மின் வாரியத்தினர், நீர்வள ஆதாரத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்துகொண்டனர். அப்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கும் சமயத்தில் அனைத்து துறையினரும் 24 மணி நேரமும் உஷாராக இருக்க வேண்டும். மண்சரிவு ஏற்படுதல், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுதல், மழைநீர் வீடுகளுக்குள் புகுதலை தடுக்க அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். பாதிக்கப்படும் மக்களை வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைப்பது, அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை பெற்று தருவது, உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பது என்று அறிவுரை வழங்கப்பட்டது.


Next Story