வக்கீல் நந்தினி, தங்கையுடன் கைது


வக்கீல் நந்தினி, தங்கையுடன் கைது
x

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய வக்கீல் நந்தினி, தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.

மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகள்கள் வக்கீல் நந்தினி (வயது 29), சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா (24). இவர்கள் இருவரும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சுதந்திர தினத்தன்று மதுரை காந்திமியூசியத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக அறிவித்தனர். அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் 2 பேரும் மத்திய அரசுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வீட்டிலேயே ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். பின்னர் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story