வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசர நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையில், செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, திருப்பூர் மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜமீலாபானு மற்றும் அவரது மகள் ஆகியோரை வழக்கறிஞர் அலுவலகத்தில் நுழைந்து கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வலியுறுத்தியும் நேற்று ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகளில் இருந்து விலகி இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த (பார் அசோசியேசன்) வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.


Next Story